தெய்வப்புலவர் - திருவள்ளுவர்



திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர் எனக் கருதப்படுகிறார். திருக்குறளை இயற்றியவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவராக இருக்கக்கூடும் என்ற வரலாற்று நம்பிக்கையின் அடிப்படையில், திருக்குறளின் ஆசிரியருக்கு திருவள்ளுவர் என்ற காரணப்பெயர் அமைந்தது. திருவள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி.


திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.


திருக்குறள் உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.


இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது.


தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி கடல் முனையில் 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது தவிர சென்னையில் வள்ளுவர் கோட்டம் ஒன்றும் அமைத்துள்ளது.

4 comments:

  1. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான் புகழ் கொண்ட தமிழ்நாடு..

    தமிழ் மொழிக்கு மிகப்பெரிய பெருமையே....திருக்குறள் தான்.

    ReplyDelete
  2. கணக்கு ஆசிரியர் என்று சொல்லியிருக்கீங்க தமிழ் என்சைக்லோபீடியாவே உங்ககிட்ட இருக்கு.அற்புதங்க... ... இதற்கான மெனக்கெடலுகே உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...
    வாழ்த்துக்களுடன்,
    rajeshnedveera

    ReplyDelete
  3. பதிவுகள் அனைத்தும் அருமை!உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. தமிழ் என் தாய்மொழி ராஜேஷ்...
    நன்றி ராஜேஷ் & தேவன்

    ReplyDelete