அதிசயத் தொப்பி


ஒரு கிராமத்தில் ராமு என்ற ஏழை குடியானவர் தம் மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். அவர்கள் உண்ண உணவும் உடுத்த ஆடையும் இன்றி வறுமையில் வாடினர். வறுமையின் காரணத்தால் அக்குடியானவன் தம் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. அதனால் அவர்கள் எவ்வித உலக அறிவும் இன்றி கிணற்றுத் தவளையாகவே வாழ்ந்து வந்தனர்.
ஒருநாள் ராமுவுக்கு அதிசயத் தொப்பு ஒன்று கிடைத்தது. அத்தொப்பி கேட்டதையெல்லாம் கொடுத்தது. அதனால் ராமு சற்று வசதியுடன் வாழ ஆரம்பித்தான். ஏழைகளுக்கும் உதவி வந்தான். இதனைக் கண்ட அவன் நண்பன் ராஜூ, ராமுவிடம் அவன் பணக்காரனான காரணத்தைக் கேட்டான். ராமு சொல்ல மறுத்தும் ராஜூ காரணத்தைக் கேட்டு ஒற்றைக் காலிலேயே நின்றான். ராமுவும் அவனை நம்பி ரகசியத்தைக் கூறினான். உண்மையில் ராஜு ஓர் ஓட்டை வாய். அவன் உடனே அந்த ரகசியத்தை ஊர் மக்களிடம் கூறினான். விவரம் அறிந்த ஊர் மக்கள் ராமுவுக்கு கிடைத்த அதிசயத் தொப்பி பற்றி அரசரிடம் கூறினர். அரசரும் அத்தொப்பியை அவனிடமிருந்து வாங்கி சென்று விட்டார். பாவம் ராமு, மறுபடியும் ஏழையாக வாழ ஆரம்பித்தான்.

No comments:

Post a Comment