நிறுத்தக் குறியீடுகள் (Punctuation Marks)

நாம் பேசும் போது நமது பேச்சில் வெளிப்படுத்தும் உணர்வுகளை, எழுத்தில் எழுதி உணர்த்தவும், எழுதியவற்றை வாசிப்போர் உணர்ந்து வாசிக்கவும் உதவும் இன்றியமையாத குறியீட்டு அடையாளங்கள் ஆகும். அத்துடன் இவை ஒவ்வொரு வாக்கியத்தையும் தனித்தனியே பிரித்து வாசித்திடவும், வாக்கியத்தின் உற்பிரிவுகளை எளிதாக உணர்த்திடவும், வியப்பு, வினா போன்ற உணர்வுகளை உணர்த்திடவும் உதவுகின்றன. அதாவது நாம் பேசும் பொழுது நம் குரலை சில இடங்களில்உயர்த்தியும், தாழ்த்தியும், இடையிடையே நிதானித்தும், நிறுத்தியும் கேட்போருக்கு விளங்கும் வகையில் பேசுவோம் அல்லவா! அதனை தான் இந்த நிறுத்தக்குறியீடுகள் எழுத்து வடிவில் செய்கின்றன.

இந்த நிறுத்தக் குறியீடுகளை சரியாகப் பயன்படுத்தாது விட்டால் அவை சிலவேளைகளில் முற்றிலும் தவறான பொருளை தந்துவிடும் அபாயமும் உள்ளது. எனவே நிறுத்தக் குறியீடுகளின் பயன்பாட்டை சரியாக அறிந்து பயன்படுத்தல் மிகவும் முக்கியமானது.

Summary of Punctuation Mark


Punctuation Marks
நிறுத்தக் குறியீடுகள்
Symbols
.
Colon
முக்காற்புள்ளி
:
Semicolon
அரைப்புள்ளி
;

Comma
காற்புள்ளி
,
Apostropheaangilam.blog
உடைமைக்குறி
'

Hyphen
இடைக்கோடு
-
Dash (Long hyphen)
இடைக்கோடு
-

Underscore
கிடைக்கோடு
_

Underline
அடிக்கோடு

Question Mark
கேள்விக்குறி
?

Exclamation Mark
வியப்புக்குறி
!

Forward slash
முன்சாய்கோடு
/
Backslash
பின்சாய்கோடு
\

Double quotation marks
இரட்டைமேற்கோள் குறிகள்
" "

Single quotation marks
ஒற்றை மேற்கோள் குறிகள்
' '

Pound sign
நிறை நிறுத்தக்குறி
#

Ampersand/and
இணைப்புக்குறி / உம்மைக்குறி
&

Asterisk
நட்சத்திரக்குறி
*

Ellipsis
தொக்கிக்குறி
. . .

Brackets
அடைப்புக்குறிகள்
( ) { } [ ] < >

1 comment:

  1. எனக்கு நீண்ட நாட்களாக இருக்கிற ஒரு சந்தேகம்..

    கூகிள்ளில் தேடியும் சரியான பதில் இல்லை. ..

    தமிழ் நல்ல தெரிஞ்ச நெறைய பேர் இங்க இருக்கீங்க, உங்க கிட்ட கேட்க வந்துட்டேன்..

    தமிழ் எழுத்து மொழியில் "நிறுத்த குறியீட்டு " ( punctuations ) இருக்கா ?

    இருந்தால் அது மற்ற மொழயில் இருந்து தமிழுக்கு வந்ததா? தமிழ் புத்தகத்தில் அதற்க்கு எங்கையும் விளக்கம் படித்த நாபகம் இல்லை..

    ReplyDelete